தேசியம்
செய்திகள்

உக்ரைனின் எதிர்காலம் குறித்த முடிவுகளை உக்ரைனியர்களே எடுக்க வேண்டும்: கனடிய பிரதமர்

உக்ரைனின் எதிர்காலம் குறித்த முடிவுகளை உக்ரைனியர்களே எடுக்க வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் Mark Carney, உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy ஆகியோர் திங்கட்கிழமை (11)  தொலைபேசியில் உரையாடினர்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த எந்தவொரு விவாதத்திலும் உக்ரைன் ஒரு தரப்பாக இருக்க வேண்டும் என்ற உடன்பாட்டை இரு நாடுகளின் தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சர்வதேச எல்லைகளை கட்டாயமாக மாற்ற முடியாது என கனடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் நட்பு நாடுகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், எந்த ஒரு சமாதான ஒப்பந்தத்திலும் “வலுவான, நம்பகமான” பாதுகாப்பு உத்தரவாதம் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

Related posts

கனடிய சீக்கிய தலைவர் கொலையுடன் தொடர்பு இல்லை: வெளியேற்றப்பட்ட கனடிய இந்திய தூதர் மறுப்பு

Lankathas Pathmanathan

November 4ஆம் திகதி Don Valley மேற்கு இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Montreal இணைய வானொலி ஊடகர் Haitiயில் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment