September 12, 2026
தேசியம்
செய்திகள்

தமிழர் நிகழ்வில் கலந்து கொண்ட இருவர் கத்திக் குத்துக்கு இலக்காகினர்!  

Taste of Tamil நிகழ்வில் கலந்து கொண்ட இருவர் கத்திக் குத்துக்கு இலக்கான சம்பவம் காவல்துறையினரால் விசாரிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் Scarborough-வில் Finch Avenue E. & Morningside Avenue சந்திப்புக்கு அருகில்  ஞாயிற்றுக்கிழமை (10)  இரவு 11 மணி அளவில் நிகழ்ந்தது.

கொள்ளை முயற்சி ஒன்று கத்திக் குத்தாக மாறியதாக Toronto காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.

இதில் சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.

காயமடைந்த இருவர் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஆறு அல்லது ஏழு பேர் கொண்ட குழு அவர்களை அணுகி கொள்ளை முயற்சியை முன்னெடுத்ததாக தெரியவருகிறது.

சந்தேக நபர்களில் ஒருவர், இருவரையும் கூர்மையான ஆயுதத்தால் குத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் 18 வயது இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடனும், 38 வயதான ஒருவர் சிறிய காயங்களுடனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கும் காவல்துறை தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கோருகின்றனர்.

Related posts

நேற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Paris Paralympics: ஒன்பது நாட்களின் 23 பதக்கங்கள் வென்ற கனடா

Lankathas Pathmanathan

சிறுபான்மை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக்கான கடுமையான அணுகுமுறை: NDP தலைவர் அறிவித்தல்! 

Gaya Raja

Leave a Comment