September 6, 2026
தேசியம்
செய்திகள்

ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று கனடியர்கள் கைது!

ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று பேரை கனடிய எல்லை சேவைகள் அதிகாரிகள் கைது செய்தனர்.

Quebec-கில் 44 வெளிநாட்டு குடிமக்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் இந்த மூவர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை RCMP, Quebec மாகாண காவல்துறை இணைந்து நடத்திய நகர்வொன்றில் 44 வெளிநாட்டு குடிமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இவர்கள் அமெரிக்காவிலிருந்து எல்லையைக் கடந்து கனடாவுக்குள் நுழைந்தவர்கள் என RCMP தெரிவித்து.

இதில் 25 வயதான Ogulcan Mersin, 31 வயதான Dogan Alakus, 31 வயதான Firat Yuksek ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றசாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

இவர்களுக்கு எதிராக ஆள் கடத்தல் உட்பட குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை (06) நீதிமன்றில் நிறுத்தப்படும் இவர்கள், மேலும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளலாம் என தெரியவருகிறது.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Al-Quds தின பேரணி திட்டமிட்டபடி நடைபெறும்?

Lankathas Pathmanathan

கனடாவில் இரா.சம்பந்தன் நினைவேந்தல்

Lankathas Pathmanathan

புதிய NDP தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment