தேசியம்
செய்திகள்

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் மூன்றாவது தமிழர்!

Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மூன்றாவது தமிழர் தாக்கல் செய்துள்ளார்.

Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வால் புருஷோத்தமன் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.

இவர் ஒரு கணக்காளர் எனத் தெரியவருகிறது.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு June 30-ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் நாள் தமிழரான கிள்ளி செல்லையா முதலாவது வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

தவிரவும் இரண்டாவது தமிழ் வேட்பாளராக ஆரணி முருகானந்தன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் August 15, 2025 பிற்பகல் 2 மணி வரை வேட்பாளராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.

Related posts

அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகிவரும் பிரதமர்?

Lankathas Pathmanathan

Florida படகு வெடிப்பில் கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

COVID பயண விதிகளை விலக்க பிரதமர் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment