தேசியம்
செய்திகள்

ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் குறித்து கனடியர்களுக்கு எச்சரிக்கை

ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் குறித்து கனடியர்களுக்கு வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இஸ்ரேலும் ஈரானும் பதற்றத்தை தணிக்குமாறு கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வலியுறுத்தினார்.

“இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரிப்பதை கனடா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என அமைச்சர் அனிதா ஆனந்த் வெள்ளிக்கிழமை (13) அதிகாலை ஒரு சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

தொடரும் இதுபோன்ற நடவடிக்கை பேரழிவு தரும் விளைவுகளுடன் பரந்த பிராந்திய மோதலைத் தூண்டும் அபாயம் உள்ளது என குறிப்பிட்ட அவர், பதற்றத்தை குறைப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

இரு நாடுகளும் பொதுமக்களை பாதுகாக்கவும், “பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கவும்” தனது பதிவில் அனிதா ஆனந்த் வலியுறுத்தினார்.

தற்போது இந்தப் பிராந்தியத்தில் உள்ள கனடியருக்கு அமைச்சர் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் அனிதா ஆனந்த் கோரினார்.

இந்த நிலையில் மத்திய கிழக்கில் உள்ள கனடியர்கள் விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள கனடா தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Related posts

2024 Olympic: 21 பதக்கங்களை வெற்றி பெறும் கனடா?

Lankathas Pathmanathan

கனடிய மாகாணங்களில் தொடரும் TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

NDP வேட்பாளராக மற்றுமொரு தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment