தேசியம்
செய்திகள்

நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரி

நாடாளுமன்ற உறுப்பினராக ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் பதவியேற்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தமிழர்களில் ஹரி ஆனந்தசங்கரியும் ஒருவராவார்.

இந்த நிலையில் நான்காவது முறையாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Scarborough – Guildwood -Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 35,295 (64%) வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக நான்காவது முறையாக தெரிவானார்.

இந்த நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெள்ளிக்கிழமை (23) பதவியேற்றார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஹரி ஆனந்தசங்கரி, இந்த மாதம் MarkCarney அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்

Lankathas Pathmanathan

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்கு அழைக்கப்பட மாட்டார்?

Lankathas Pathmanathan

Gardiner விரைவுச் சாலை விபத்தில் பெண் மரணம் – நால்வர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment