September 18, 2026
தேசியம்
செய்திகள்

கட்சி தலைவர்களின் விவாதங்களில் இருந்து பசுமைக் கட்சி நீக்கப்பட்டது  ‘ஜனநாயக விரோதமானது’?

கட்சி தலைவர்களின் விவாதங்களில் இருந்து பசுமைக் கட்சி நீக்கப்பட்டது  ‘ஜனநாயக விரோதமானது’ என கட்சியின் இணைத் தலைவர் கண்டித்தார்.

பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் விவாதங்களில் பங்கேற்பதற்கான பசுமைக் கட்சியின் அழைப்பு மீளப்பெறப்பட்டது.

விவாதங்களில் பங்கேற்க விவாத ஆணையம் நிர்ணயித்த நிபந்தனைகளை பசுமை கட்சி பூர்த்தி செய்யவில்லை என தலைவர்களின் விவாத ஆணையம் தனது முடிவுக்கான காரணமாக தெரிவித்தது.

பசுமைக் கட்சிக்கான அழைப்பை விவாதம் ஆரம்பிப்பதற்கு 12 மணி நேரத்திற்குள் இரத்து செய்தது குறித்து கட்சியின் இணைத் தலைவர் Jonathan Pedneault கண்டனம் தெரிவித்தார்.

அனைத்து தொகுதிகளில்  வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என கட்சி ஒரு மூலோபாய முடிவை எடுத்ததால் விவாதத்தில் பங்கேற்ற விடுக்கப்பட்ட அழைப்பு மீளப்பெறப்பட்டது என ஆணையம் கூறியது.

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு “ஜனநாயகமற்றது”  என பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் கண்டித்தார்.

இந்த முடிவு ஜனநாயகத்தை பாதுகாப்பதாக அமையவில்லை என Jonathan Pedneaul தெரிவித்தார்.

இந்த முடிவினால் “ஏமாற்றம்” அடைந்துள்ளதாக தெரிவித்த Liberal கட்சி, பசுமைக் கட்சி விவாதத்தில் பங்கேற்றபதை ஆதரிப்பதாகவும் கூறியது.

இந்த விடயத்தில் விவாத ஆணையத்தின் முடிவை மதிப்பதாக NDP தெரிவித்தது.

இது குறித்து இதுவரை Conservative கட்சி கருத்து தெரிவிக்கவில்லை.

பொதுத் தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் ஆங்கிலம், பிரெஞ்சு மொழி உத்தியோகபூர்வ  விவாதங்கள் புதன், வியாழக்கிழமைகளில் Montreal நகரில் நடைபெறுகின்றன.

Related posts

கனடிய தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடும் காலம் இது: பொங்கல் செய்தியில் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Carbon வரி உயர்வை எதிர்க்கும் முதல்வர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment