அடுத்த தேர்தலுக்கு முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில் உள்ளது.
Liberal கட்சியின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளும் Liberal கட்சி வேட்பாளர்களை நியமிப்பதில் Conservative கட்சியை விட பின்தங்கியுள்ளது.
மொத்தம் 343 தொகுதிகளில் Liberal கட்சி 129 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமித்துள்ளது.
Conservative கட்சி 221 தொகுதிகளிலும், புதிய ஜனநாயக கட்சி 93 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமித்துள்ளது.
Conservative கட்சி கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் உள்ள நிலையில் திறமையான வேட்பாளர்களை நியமிப்பதில் Liberal கட்சி சவால்களை எதிர் கொள்ளலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
இதுவரை Liberal கட்சி ஒரு தமிழரை வேட்பாளராகவும், Conservative கட்சி இரண்டு தமிழர்களை வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.