Scarborough நகரில் உள்ள Woodside திரையரங்கில் வார இறுதியில் இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
சனிக்கிழமை (09) பின்னிரவு 10.30 மணியளவில் திரையரங்கின் கதவுகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது திரையரங்கில் பார்வையாளர்கள் இருந்ததாக தெரிய வருகிறது.
சில மணிநேரங்களுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை இரண்டாவது சம்பவத்தில் திரையரங்கின் மீது மீண்டும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக Toronto காவல்துறையினர் கூறுகின்றனர்.
இவ்விரு சம்பவங்களிலும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
திரையரங்கின் கண்ணாடி நுழைவு கதவுகளில் குறைந்தது ஏழு சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி சூட்டு அடையாளங்கள் காணப்பட்டன.
விசாரணையின் ஆரம்ப நிலையில் இந்த இரண்டு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா அல்லது இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியில் என்ன உள்நோக்கம் குறித்த விபரங்களை வெளியிட முடியாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த மாத ஆரம்பத்தில், திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
திரையரங்கிற்குள் புகுந்த இரண்டு சந்தேக நபர்கல் பொதி ஒன்றை கொளுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்த திரையரங்கம் தமிழர்களினால் நிர்வாகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது