தேசியம்
செய்திகள்

நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் NPDயின் முடிவு குறித்து ஆச்சரியம்

Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் NPDயின் முடிவு குறித்து ஆச்சரியம் வெளியிடப்படுகிறது.

Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக Jagmeet Singh புதன்கிழமை (04) அறிவித்தார்.

இந்த முடிவு குறித்து Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் Karina Gould ஆச்சரியம் தெரிவித்தார்.

NDP எடுத்துள்ள இந்த முடிவு குறித்து முன்னர் அறிந்திருக்கவில்லை என Karina Gould கூறினார்.

Liberal கட்சியை “பலவீனமானவர்கள்”,  சுயநலவாதிகள்” என விமர்சித்த Jagmeet Singh, அவர்கள் கனடியர்களிடமிருந்து மற்றொரு வாய்ப்பை பெற தகுதியற்றவர்கள் எனவும் தனது அறிவித்தலில் கூறினார்.

இந்த இரு தரப்பு ஒப்பந்தம் March 2022 இல் கையெழுத்தானது.

இது June 2025 இல் காலாவதியாக இருந்தது.

சிறுபான்மை அரசில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.

நீண்டகால முற்போக்கான கொள்கைகளின் முன்னேற்றத்திற்கு பதிலாக நம்பிக்கை வாக்கெடுப்புகளில் Liberal கட்சிக்கு ஆதரவளிக்க இந்த ஒப்பந்தத்தில் NDP உடன்பட்டது.

Related posts

கனடிய இறையாண்மைக்கு ஆதரவாக நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள்!

Lankathas Pathmanathan

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

British Colombia வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

Leave a Comment