தேசியம்
செய்திகள்

Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சி தலைவர் தெரிவு

Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக Naheed Nenshi நியமிக்கப்பட்டார்.

Calgary நகர முன்னாள் முதல்வரான Naheed Nenshi புதிய NDP தலைவராக தெரிவானார்.

முதல் வாக்கெடுப்பில் 86 சதவீத வாக்குகளைப் பெற்று Naheed Nenshi  தனது வெற்றியை எளிதாகப் பெற்றார்.

Alberta மாகாண எதிர்க்கட்சித் தலைவராக அவர் தெரிவானார்.

ஆனால் அவர் சட்டமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2010 இல் முதல் முறை Calgary நகர முதல்வராக தெரிவான Naheed Nenshi, தொடர்ந்து மூன்று முறை நகர முதல்வர் பதவி வகித்தார்.

2015 முதல் 2019 வரை Alberta மாகாண முதல்வராக இருந்த முன்னாள் தலைவர் Rachel Notley, தொடர்ந்து இரண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, NDP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த January  மாதம் அறிவித்தார்.

Related posts

Haitiக்கான புதிய உதவிகளை அறிவித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Ambassador பாலத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும்  முயற்சி முறியடிப்பு

Lankathas Pathmanathan

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

Gaya Raja

Leave a Comment