Carbon விலை அதிகரிப்பு குறித்து பிரதமர், மாகாண முதல்வர்களுக்கு இடையிலான அவசர கூட்டத்திற்கான பிரேரணையை Conservative கட்சி முன்வைத்துள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மாகாண முதல்வர்களுடனான அவசர சந்திப்பில் பிரதமர் தனது Carbon விலை அதிகரிப்பை நியாயப்படுத்த Conservative தலைவர் Pierre Poilievre சவால் விடுத்துள்ளார்.
Justin Trudeau ஐந்து வாரங்களுக்குள் மாகாண, பிராந்திய தலைவர்களுடன் இந்த அவசர கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை (09) Conservative கட்சி முன்வைத்த இந்த பிரேரணை கோருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (10) இந்த பிரேரணை மீது வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.