September 7, 2026
தேசியம்
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த மற்றொருவர் மரணம்

கடந்த வாரம் Manitobaவில் நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது.

கடந்த வாரம் வியாழக்கிழமை (15) பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் செவ்வாய்கிழமை  (20) நேற்று சிகிச்சை பலனின்றி பலியானதாக RCMP புதன்கிழமை (21) அறிவித்தது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதலில் அறிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் ஒருவர் செவ்வாயன்று மரணமடைந்தார்.

இதன் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்தது.

இந்த விபத்து குறித்து RCMP தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் துப்பாக்கிச் சூடு?

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடிய பிரதமர் – Alberta முதல்வர் சந்திப்பு: குழாய்த் திட்டம் தொடர்பாக அடுத்த மாதத்திற்குள் ஒரு உடன்பாடு?

Lankathas Pathmanathan

Leave a Comment