தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் வெள்ளிக்கிழமை (12) Ontario மாகாணத்தில் ஆரம்பமாகின்றது.

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை சட்ட மூலமாக்கும் சட்டம்  2021ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

இந்த சட்டமூலம் ஒவ்வொரு ஆண்டும் May 18ஆம் திகதி முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாக அறிவிக்கிறது.

Scarborough-Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த தனிநபர் சட்டமூலத்தை முன்வைத்திருந்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்த உலகின் முதலாவது  சட்டமூலமாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என ஆலோசனை

கனடா: COPA அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு தெரிவு

Lankathas Pathmanathan

கட்டுப்பாடுகளை நீக்க மூன்று படி திட்டத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

Leave a Comment