தேசியம்
செய்திகள்

சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசவில்லை: Pierre Poilievre

சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசியதாக வெளியான செய்தியை Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre நிராகரிக்கிறார்.

Conservative  தலைவர் இரண்டு முறை தன்னுடன் பேசியதாக  சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதி Christine Anderson கூறியிருந்தார்.

எனினும் அவருடன் தான் பேசவில்லை என Pierre Poilievre  தனது ஊடகப்  பேச்சாளார் மூலம் மறுத்துள்ளார்.

Freedom Convoy இயக்கத்திற்கு ஆதரவாக கடந்த வாரம் Christine Anderson  கனடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிந்தார்.

இந்த பயணத்தின் போது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரை மூன்று Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

தனது நாடாளுமன்ற உறுப்பினகளின் இந்த சந்திப்பை கட்சி தலைவர் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தீவிர வலதுசாரி அரசியல்வாதியான இவரது இனவெறி கருத்துக்களையும்  Pierre Poilievre கண்டித்திருந்தார்

Related posts

கனடா முழுவதும் சிறப்பு வானிலை அறிக்கை

Lankathas Pathmanathan

Stanley Cup: கனடிய அணிகள் வெளியேற்றம்

கனடா-அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைகின்றன!

Lankathas Pathmanathan

Leave a Comment