தேசியம்
செய்திகள்

COVID தடுப்பூசி எல்லைக் கொள்கையை கைவிட கனடா தீர்மானம்

COVID தடுப்பூசி எல்லைக் கொள்கையை கைவிட கனடா தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

September இறுதிக்குள் மத்திய அரசு தனது COVID தடுப்பூசிக்கான எல்லைத் தேவைகளைக் கைவிடத் திட்டமிட்டுள்ளது.

ArriveCan செயலியின் பயன்பாடு கட்டாயமற்றதாக அமையவுள்ளது.

இந்த மாத இறுதியுடன் பயணிகளுக்கான நிலுவையில் உள்ள சீரற்ற COVID சோதனைகளும் முடிவுக்கு வரவுள்ளது.

கடந்த June மாதம் முதல், தடுப்பூசி போடப்படாத கனடியர்களை உள்நாட்டு அல்லது சர்வதேச இடங்களுக்குச் செல்லும் விமானங்களிலும் புகையிரதங்களிலும் ஏற அரசாங்கம் அனுமதிக்க ஆரம்பித்தது.

ஆனால் அவர்கள் சர்வதேச நாடுகளில் இருந்து மீண்டும் கனடாவுக்குள் நுழையும் போது தற்போதைய தனிமைப்படுத்தல் தேவைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நடைமுறை அமுலில் உள்ளது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் இந்த மாத இறுதியுடன் முடிவுக்கு வரவுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

Ontario மாகாண முன்னாள் ஆளுநருக்கு அரசமுறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்கள் வருகையை மேலும் குறைக்க முடிவு

Lankathas Pathmanathan

கனடா இன்னமும் ஒரு தொற்றுக்கு மத்தியில் உள்ளது: பிரதமர் Trudeau

Leave a Comment