தேசியம்
செய்திகள்

கனடா இன்னமும் ஒரு தொற்றுக்கு மத்தியில் உள்ளது: பிரதமர் Trudeau

கனடா இன்னமும் ஒரு தொற்றுக்கு மத்தியில் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

செவ்வாய்க்கிழமை (31) அமுலுக்கு வந்த COVID எல்லை கட்டுப்பாடுகள் நீட்டிப்பை பிரதமர் ஆதரித்துள்ளார்.

மிக விரைவில் கட்டுப்பாடுகளை நீக்குதல் பயணத் துறைக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் பிரதமர் எச்சரித்தார்.

COVID காரணமாக ஒவ்வொரு நாளும் இறக்கும் கனடியர்கள் உள்ளனர் எனவும் அவர் புதன்கிழமை (01) செய்தியாளர்களிடம் கூறினார்.

மத்திய COVID கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் June மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக Health கனடாவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனமும் புதனன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

கனேடிய விமான நிலையங்களில் தாமதங்களும் குழப்பங்களும் ஏற்படலாம்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!