தேசியம்
செய்திகள்

COVID வைரஸ் எதிர்ப்பு மருந்து மதிப்பாய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளது: Health கனடா

Pfizerரின் COVID வைரஸ் எதிர்ப்பு மருந்து மதிப்பாய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக Health கனடா கூறுகின்றது.

Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் Dr. Supriya Sharma வியாழக்கிழமை (13) இந்த தகவலை வெளியிட்டார்.

Pfizerரின் நம்பிக்கைக்குரிய வைரஸ் தடுப்பு மருந்தை மறு ஆய்வு செய்வதற்கான இறுதிக் கட்டங்களில் Health கனடா செயல்பட்டு வருகிறது என அவர் கூறினார்.

அடுத்த வாரம் முதல் 10 நாட்களுக்குள் இது குறித்து முடிவு வெளியாகும் என Sharma கூறினார்.

December 1, 2021 அன்று Pfizer தனது மருந்தான Paxlovidக்கான மருத்துவ தரவை Health கனடாவிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் நாடு திரும்பினர்

Lankathas Pathmanathan

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட Conservative தலைவருக்கு அழைப்பு!

Lankathas Pathmanathan

68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது குறித்த தகவல்களை அனுப்பும் மத்திய அரசு!

Lankathas Pathmanathan

Leave a Comment