September 2, 2026
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகின!

கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த கனேடிய தேர்தலின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

மொத்தம் 338 தொகுதிகளை கொண்ட கனேடிய நாடாளுமன்றத்தில் Liberal கட்சி மீண்டும் சிறுபான்மை அரசை அமைத்துள்ளது.

Liberal 159, Conservative 119, Bloc Québécois 33, NDP 25, Green 2 என இம்முறை ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பத்து தமிழ் வேட்பாளர்களின் இருவர் வெற்றி பெற்றனர்.

Liberal கட்சியின் சார்பில் Scarborough – Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி, Oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகளை இதுவரை தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவுக்கு இந்திய பிரதமர் அழைப்பு?

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்கள் வருகையை மேலும் குறைக்க முடிவு

Lankathas Pathmanathan

Quebec பொது சுகாதார இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment