தேசியம்
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 43 கனேடியர்கள் வெளியேறினர்!

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த கனேடியர்கள் உட்பட பல மேற்கத்தியர்கள் வியாழக்கிழமை காபூலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வியாழக்கிழமை காபூலில் இருந்து வணிக விமானத்தில் வெளியேறிய சுமார் 200 வெளிநாட்டினர்களின் கனேடியர்களும் அடங்கியிருந்தனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கத்தார் வணிக விமானத்தில் பயணம் செய்தவர்களில் 43 கனேடியர்களும் அடங்குவதாக தெரியவருகின்றது.

கனேடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneau ஒரு அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த மாத இறுதியில் அனைத்து அமெரிக்க இராணுவப் படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு சிக்கியிருந்த 1,250 கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் இந்த 43 பேரும் அடங்குவர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து 3,000க்கும் மேற்பட்டவர்கள் கனடாவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கனேடிய குடிவரவு அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தயாராக உள்ளோம்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவை தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை மீட்க Amber எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment