தேசியம்
செய்திகள்

இரண்டு வருடங்களின் பின்னர் கனடாவில் Blue Jays!!

Toronto Blue Jays baseball அணி சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை கனடாவில் ஒரு தொடரை ஆடவுள்ளது.

Blue Jays அணி கனடா திரும்புவதைக் குறிக்கும் வகையில் நயாகரா நீர்வீழ்ச்சி, C.N. கோபுரம் உள்ளிட்ட கனடா முழுவதும் உள்ள அடையாளங்கள் வியாழன் இரவு நீல மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளியூட்டப்பட்டன.

தவிரவும் கனடா முழுவதும் உள்ள நகரங்கள் பலவும் Blue Jays அணியின் வருகையை கொண்டாடுகின்றன.

வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் தொடர், Torontoவில் அமைந்துள்ள Rogers மைதானத்தில் நடைபெறுகின்றது.

COVID தொற்றின் விளைவாக நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக, Blue Jays அணி 2020 மற்றும் 2021 ஆண்டு ஆட்டங்களை Buffaloவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

Toronto நகரசபை தேர்தலில் முதலாவது தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

Blue Jays அணி World Series தொடருக்கு முன்னேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment