September 13, 2026
தேசியம்
செய்திகள்

25 சதவீதமானவர்கள் COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்

கனடாவின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதமானவர்கள் இதுவரை குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

கனடாவில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 7,276 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 3,469, Albertaவில் 1,345, Quebecகில் 1,136, British Columbiaவில் 849, Saskatchewanனில் 249, Manitobaவில் 211, Nova Scotiaவில் 9, Nunavutரில் 5, Newfoundland and Labradorரில் 2, Prince Edward Islandடில் 1 என தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 22, Quebecகில் 17, Albertaவில் 5, British Columbiaவில் 1, Manitobaவில் 1 என மரணங்களும் அறிவிக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமையுடன் கனடாவில் 1,139,043 தொற்றுகளும், 23,713 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன், 1,027,458 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

கனடா திரும்பும் பயணிகள் மீண்டும் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டும்

Lankathas Pathmanathan

COVID காரணமாக தேசிய போட்டியில் இருந்து விலகும் கனேடிய தடகள நட்சத்திரம்

Lankathas Pathmanathan

கனடா-அமெரிக்க வர்த்தகம் இரண்டு ஆண்டுகளில் $2 பில்லியன் குறைந்தது?

Lankathas Pathmanathan

Leave a Comment