December 12, 2024
தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்செய்திகள்

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கை காரணமாக Brampton நகரில் உள்ள முக்கிய Amazon பூர்த்தி மையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.Brampton நகரில் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அங்கு அமைந்துள்ள Amazon பூர்த்தி மையங்களில் ஒன்றான Heritage வீதியில் அமைந்துள்ள பூர்த்தி மையத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட இந்தப் பூர்த்தி மையத்தை வெள்ளிக்கிழமை (12) நள்ளிரவு முதல் செயல்படும் வகையில் தற்காலிகமாக மூட Peel பிராந்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இங்கு கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிட்டனர்.

இந்தப் பூர்த்தி மையத்தில் 5 ஆயிரம் பணியாளர்கள் வரை கடமையாற்றுகின்றனர். இவர்களின் 617 பேர் கடந்த October முதல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக Peel பிராந்திய சுகாதாரப் பிரிவு குறிப்பிடுகின்றது.

“ஒரு கடினமான முடிவு” – சுகாதார அதிகாரி கடந்த சில வாரங்களில் இந்தப் பூர்த்தி மையத்தில் புதிய திரிபுகள் உட்பட தொற்றால் பாதிக்கப்பட்ட 240 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறிப்பிட்ட பூர்த்தி மையத்தை March 13 (சனி) முதல் 27 (சனி) வரையான இரண்டு வார காலத்துக்கு
மூடிவைக்க Peel பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Lawrence Loh உத்தரவிட்டார்.

“இது ஒரு கடினமான முடிவு” என March 12ஆம் திகதி வெளியான தனது அறிக்கையில்
வைத்தியர் Loh குறிப்பிட்டார். இந்த நிலையில் குறிப்பிட்ட பூர்த்தி மையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தொற்றின் பரவலுக்கான அதிக ஆபத்து உள்ளதை நிராகரிக்க முடியாது என தமது பொது சுகாதார விசாரணை தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் இந்தப் பூர்த்தி மையத்திலும், Brampton சமூகத்திலும் தொற்றின் பரவலை தடுக்க இந்த முடிவு அவசியமானது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Brampton போக்குவரத்துச் சபையின் சேவை நிறுத்தம் இந்த வார ஆரம்பத்தில், ஒன்பது பேரூந்து ஓட்டுனர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதன் காரணமாக இந்தப் பூர்த்தி மையத்திற்கான பேரூந்து சேவையை நிறுத்த Brampton போக்குவரத்துச் சபை முடிவு செய்திருந்தது. ஆனாலும் Amazon தனியார் பேரூந்துகள் (chartered buses and coaches) மூலம் தமது தொழிலாளர்களுக்கு போக்குவரத்து ஒழுங்குகளை
மேற்கொண்டிருந்தது.

சுகாதாரத்துறையின் சரியான முடிவு – நகர முதல்வர் பாராட்டு
இந்த விடயத்தில் Peel பிராந்திய சுகாதாரத்துறை சரியான முடிவை எடுத்துள்ளதாக Brampton நகர முதல்வர் Patrick Brown கூறினார். “Amazon ஒரு பெரிய சர்வதேச நிறுவனமாக இருந்தாலும், எங்கள் குடியிருப்பாளர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பை விட வேறு எந்த நிறுவனமும் முக்கியமில்லை” என அவர் தெரிவித்தார்.

“சுகாதாரத்துறை இந்த தைரியமான நடவடிக்கையை மேற்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனவும் நகர முதல்வர் தெரிவித்தார். சமூகத்தில்
தொற்றுக்களின் எண்ணிக்கை சரியான திசையில் செல்வதாக கூறிய அவர், குறிப்பிட்ட Amazon பூர்த்தி மையத்தில் நிலை அவ்வாறு இல்லை என சுட்டிக்காட்டினார்.

இந்த நகர்வு Brampton நகரத்தின் தொற்றின் எண்ணிக்கையை குறைக்க உதவும் எனவும் Brown கூறினார். முடிவை மேல்முறையீடு செய்யவுள்ளோம் – Amazon
Peel பிராந்தியத்தின் இந்த முடிவை மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக Amazon நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Dave Bauer கூறினார்.

பூர்த்தி மையத்தை இரண்டு வாரம் மூடுவதற்கான எண்ணிக்கையில் இங்கு தொற்றுக்கள் பதிவானதாக Amazon நம்பவில்லை எனவும் அவர் கூறினார். ஆனாலும் இந்தப் பூர்த்தி மையத்தை மூடுவதற்கான உத்தரவை Amazon பின்பற்றும் எனவும் Bauer தெளிவுபடுத்தினார். இந்த நிலையில் தமது ஊழியர்களுக்கு தேவையான
அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொற்றுக்கான உடனடி பரவல் ஆபத்து இருப்பதாக நம்பினால், Ontarioவின் சுகாதார பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்புச் சட்டத்தின் பிரிவு 22 இன் கீழ் ஒரு வணிகத்தை மூடுவதற்கு சுகாதார மருத்துவ அதிகாரிகள் உத்தரவிடலாம்.

இந்த உத்தரவை மீறும் தனிநபர்களுக்கு நாளாந்தம் $ 5,000 அபராதமும், நிறுவனங்களுக்கு நாளாந்தம் $ 25,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

Peel பிராந்தியத்தில் இந்த அளவிற்கு ஒரு வணிகத்திற்கு பிரிவு 22 உத்தரவை பிறப்பிக்க வேண்டியது இதுவே முதல் முறையாகும் என பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Lawrence Loh கூறினார்.

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

விசித்திரப் பையனுக்கு விபரீத முடிவு!

Gaya Raja

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

Lankathas Pathmanathan

சில மணிநேரத்தில் இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment