தேசியம்
செய்திகள்

அடுத்த கல்வியாண்டு திட்டங்களை அறிவித்த Ontario மாகாண அரசாங்கம்

2022-23 கல்வியாண்டுக்காக சுமார் 26.6 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக Ontario மாகாண அரசாங்கம் திங்கட்கிழமை (25) அறிவித்துள்ளது.

Ontario பாடசாலைகளின் அடுத்த கல்வியாண்டு குறித்த திட்டங்களை திங்களன்று மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சர் Stephen Lecce செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

COVID தொற்றின் காரணமாக தவற விடப்பட்ட கற்றல் நடவடிக்கைகளை நிவர்த்தி செய்யும் அம்சங்கள் இந்தஅறிவித்தலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

தொற்றின் மற்றொரு அலை ஏற்பட்டாலும் கூட, மாணவர்கள் தொடர்ந்து பாடசாலைக்கு செல்வதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தமது அரசாங்கம் முன்னெடுக்கும் என அமைச்சர் கூறினார்.

ஆனாலும் கல்வி ஊழியர்களை அத்தியாவசிய சேவைகள் என வகைப்படுத்தும் சட்டம் இயற்றப்படுமா என்பது குறித்து கல்வி அமைச்சர் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.

Related posts

வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்புகளின் பட்டியலை தயாரிக்கும் கனடிய அதிகாரிகள்?

Lankathas Pathmanathan

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ தலைவர்கள் நேரில் சந்திப்பு!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment