British Columbia (B.C.) பாடசாலைகளில் பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் (Sexual Orientation and Gender Identity – SOGI) தொடர்பான கற்பித்தல் வளங்களை Conservative அரசு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது.
B.C. மாகாணத்தின் புதிய Conservative அரசாங்கம், பாடசாலைகளில் பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் (SOGI) தொடர்பான கற்பித்தல் வளங்களை இணையதளங்கள், கல்வி வளங்களில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது.
பாடசாலைகளில் LGBTQ மாணவர்களை உள்ளடக்கிய சூழலை ஊக்குவிக்க ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்த இந்த இணைய வளங்களை (Resources) அரசாங்கம் இணையத்திலிருந்து அகற்றியுள்ளது.
முதல்வர் Lorne Doerkson தலைமையிலான புதிய Conservative அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, மாகாணப் பாடசாலைகளில் SOGI வளங்களை நீக்கும் முக்கியக் கொள்கை முடிவை எடுத்துள்ளது.
பாடசாலைகளில் பாலின அடையாளம், பாலியல் நோக்குநிலை குறித்த விழிப்புணர்வுக்காக ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்த SOGI 123 உள்ளிட்ட கல்வி வளங்கள் உடனடியாக இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
SOGI 123 திட்டத்தை இரத்து செய்வதாக Conservative கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:
“தங்கள் குழந்தைகள் என்ன கற்கிறார்கள் என்பது குறித்த முடிவுகளில் பெற்றோர்களை ஈடுபடுத்துவதற்கான பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதி” இது என புதன்கிழமை (25) முதல்வர் Lorne Doerkson தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த முடிவை பிற்போக்குத்தனமான முடிவு என ஆசிரியர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.
அரசின் இந்த முடிவை B.C. ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் Carole Gordon கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த நடவடிக்கையை பாடசாலைகளில் உள்ள LGBTQ மாணவர்களின் பாதுகாப்பு மீதான “தாக்குதல்” என முன்னாள் NDP அமைச்சர் Spencer Chandra Herbert விமர்சித்துள்ளார்.
