September 30, 2026
தேசியம்
செய்திகள்

Peel பிராந்தியத்தில் இந்த ஆண்டு 266 கவனச் சிதறல் திருட்டுகள் பதிவு!

Ontario மாகாணத்தின் Peel பிராந்தியத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பி நகைகள், உடமைகளைக் கொள்ளையடிக்கும் கவனச்சிதறல் திருட்டுகள் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் 266 கவனச்சிதறல் திருட்டுகள் Peel பிராந்தியத்தில் பதிவாகி உள்ளதாக Peel பிராந்திய காவல்துறை எச்சரித்துள்ளது.

Peel பிராந்திய துணைக் காவல் ஆணையர் Marc Andrews புதன்கிழமை (30) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு பதிவான கவனச்சிதறல் திருட்டுகளில் 77 சதவீத சம்பவங்கள் தங்க நகைகளைக் குறி வைத்து நடத்தப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 85 சதவீத திருட்டுகள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான இடைப்பட்ட நேரங்களிலேயே பொது இடங்களில் அரங்கேறியுள்ளன.

குறிப்பாக குழந்தைகளை பயன்படுத்தும் குழு இந்த திருட்டுகளை அரங்கேறுவதாக காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

முதியவர்கள், தனியாக நடப்பவர்களிடம் முகவரி கேட்பது போலவோ அல்லது இலவச பரிசுகளை வழங்குவது போலவோ நடித்து இவர்கள் ஏமாற்றுகின்றனர்.

அண்மையில் Brampton நகரில் நடந்து சென்று கொண்டிருந்த 78 வயது மூதாட்டி ஒருவர் இவ்வாறு குறி வைக்கப்பட்டார்.

இதில் திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு சுமார் $19,000 ஆகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நகைகள் தனது மறைந்த தந்தையால் செய்யப்பட்டவை என்பதால் அவர் தமக்குப் பெரும் உணர்வுப்பூர்வமான மதிப்புடையவை என பாதிக்கப்பட்டவரின் மகன் ராகவேந்திர குமார் தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டில் மாகாணம் முழுவதும் 25 கவனச்சிதறல் திருட்டுகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் இக்குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

$70 மில்லியன் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Albertaவில் கொள்வனவு

Lankathas Pathmanathan

முன்கூட்டிய வாக்கெடுப்பில் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வாக்குப்பதிவு

Lankathas Pathmanathan

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

Leave a Comment