தேசியம்
செய்திகள்

கனடிய தூதுக்குழுவிற்கு West Bank பகுதிக்குள் நுழைய அனுமதி மறுப்பு?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கனடிய தூதுக்குழுவிற்கு West Bank பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 30 கனடியர்கள் கொண்ட குழுவிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட West Bank பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை (16) அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தக் குழுவில் உள்ள NDP நாடாளுமன்ற உறுப்பினரான Jenny Kwan, இந்த அனுமதி மறுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட இந்த பயணம் குறித்து கனடிய அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஏற்கனவே தெரிவித்ததாக Jenny Kwan கூறினார்.

இந்த அனுமதி மறுப்பு குறித்த கனடாவின் ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளோம் என கனடிய  வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

Jordan ஊடாக West Bank பகுதிக்குள் நுழைய இந்த குழுவினர் முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களுக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக பாலஸ்தீன பிரதேசங்களில் பொதுமக்கள் விவகாரங்களை மேற்பார்வையிடும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சக நிறுவனம் தெரிவித்தது.

இந்தக் குழு கனடாவில் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த ஒரு பயணத்தை முன்னெடுத்துள்ளது.

மேற்குக் கரை, இஸ்ரேலில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களைச் சந்திப்பதே இந்த மூன்று நாள் பயணத்தின் குறிக்கோளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Quebecக்கு உதவ மத்திய அரசாங்கம் தயார்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

முஸ்லீம் குடும்பத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்? – நால்வர் பலி!

Gaya Raja

இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை கனடா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்: Bob Rae

Lankathas Pathmanathan

Leave a Comment