November 15, 2025
தேசியம்
செய்திகள்

Yukon தேர்தலில் Yukon கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி

Yukon பிரதேச தேர்தலில் Currie Dixon தலைமையிலான Yukon கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.

Yukon பிரதேச தேர்தல் திங்கட்கிழமை (03) நடைபெற்றது.

இதில் Yukon கட்சிக்கு வாக்களித்து வலுவான பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க வாக்காளர்கள் மாற்றத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என முதல்வராக தெரியாகியுள்ள Currie Dixon தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில்   Yukon கட்சி 52 சதவீத வாக்குகளுடன் 14 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது 2021 தேர்தலை விட சுமார் 13 சதவீத அதிக வாக்குகளாகும்.

தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் Yukon பிரதேசத்தில் பிறந்த முதல் முதல்வர் என்ற பெருமையை Currie Dixon பெறுகிறார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என கூறிய அவர், சில கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தனது வெற்றி உரையில் ஒப்புக் கொண்டார்.

இதற்கிடையில் Kate White தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) , Yukon-னின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.

அவரது கட்சி 38 சதவீத வாக்குகளுடன் ஆறு இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது 2021-ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளை விட 10 சதவீதம் அதிகமாகும்.

முதல்வராக பொறுப்பேற்க உள்ள Currie Dixon தலைமையிலான அரசாங்கம் பொறுப்புடன் நடப்பதை NDP உறுதிப்படுத்தும் என Kate White தனது உரையில் உறுதியளித்தார்.

இதுவரை காலமும் Liberal சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரித்த NDP, மூன்றாம் இடத்தில் இருந்து அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக மாற்றமடைந்து குறித்து Kate White மகிழ்ச்சி தெரிவித்தார்.

முதல்வர் Mike Pemberton தலைமையிலான Yukon Liberal கட்சி 10 சதவீத வாக்குகளுடன் ஒரு இடத்தில் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது 2021-ஆம் ஆண்டை விட சுமார் 23 சதவீதம் குறைவான வாக்குகளாகும்.

கடந்த அரசில் அமைச்சர்களாக இருந்த Yukon Liberal அமைச்சர்கள் ஏவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

கடந்த June மாதம் கட்சியின் தலைவரான Mike Pemberton, 21 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஒரு ஆசனத்தை வெற்றி பெறும் முயற்சியில் தோல்வி அடைந்து, மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் குறைந்தது January மாதம் நடைபெறும் தனது கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம் வரை தான் தலைவராக நீடிப்பேன் என Mike Pemberton கூறினார்.

Yukon பிரதேசத்தில் 21 தொகுதிகளை கொண்ட முதலாவது பிராந்திய தேர்தல் இதுவாகும்.

இவற்றில் 15 தொகுதிகள் புதிய எல்லைகளைக் கொண்டிருந்தது.

இந்தத் தேர்தலில் Liberal கட்சி 18 வேட்பாளர்களை மட்டும் களம் இறக்கியது.

ஏனைய இருந்து கடசிகளும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.

அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்கள் இந்தத் தேர்தலில் 53 சதவீத வாக்குப்பதிவை குறிக்கின்றன.

வாக்குப்பதிவு 2021-இல் 65.5 சதவீதமாகவும், 2016-இல் 76.3 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

முழுமையான முடக்கம்? இன்று (வியாழன்) முதல்வர் Ford அறிவிப்பார்!

Lankathas Pathmanathan

இடம்பெயர்ந்த உய்குர் மக்களை கனடா மீள்குடியேற்ற வேண்டும்!

Lankathas Pathmanathan

கனடிய மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment