பிரதமர் Mark Carney-யின் முதலாவது வரவு செலவுத் திட்டம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் François-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (04) மாலை நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.
நிதியமைச்சராக François-Philippe Champagne முன்வைக்கும் முதலாவது வரவு செலவுத் திடடம் இதுவாகும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை $78.3 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2026-27 ஆம் ஆண்டில் பற்றாக்குறை $65.4 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து, 2029-30 ஆம் ஆண்டுக்குள் $56.6 பில்லியனாக இருக்கும் என வரவு செலவுத் திட்டம் கணித்துள்ளது.
கனடாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் முக்கிய உள்கட்டமைப்பு, தொழில்துறை முதலீடுகளுக்கான திட்டத்தை முன் வைக்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
