தேசியம்
செய்திகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் முடிவுக்கு கனடியர்கள் ஆதரவு?

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் முடிவை பெரும்பான்மையான கனடியர்கள் ஆதரிப்பதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது.

ஆனால் இது அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும் என பலர் நம்புவதாக Nanos Research முன்னெடுத்த கருத்து கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

கடந்த மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக, பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான ஐ.நா. உறுப்பினர்களின் பட்டியலில் பிரதமர் Mark Carney இணைந்தார்.

47 சதவீத கனடியர்கள் அரசாங்கத்தின் முடிவை முழுமையாக ஆதரிக்கின்றனர் என Nanos கருத்து கணிப்பு கூறுகிறது.

ஏனைய 18 சதவீதம் பேர் இந்த முடிவை ஓரளவு ஆதரிப்பதாகக் கூறினர்.

இதற்கு நேர்மாறாக, பதிலளித்தவர்களில் ஐந்தில் ஒருவர் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர்.

ஒரு சிறிய பகுதியினர், அதாவது ஆறு சதவீதம் பேர், அதை ஓரளவு எதிர்ப்பதாக கூறினர்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில்  பத்து பேரில் ஒருவர் கனடிய அரசின் இந்த முடிவு குறித்து உறுதியான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த முடிவு அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக உறவைப் பாதிக்குமா என கேட்டபோது, பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், 25 சதவீதம் பேர் எதிர்மறையாகவும், 32 சதவீதம் பேர் ஓரளவு எதிர்மறையாகவும், ஓரளவு தீங்கு விளைவிக்கும் என எதிர்பார்த்ததாக கூறினர்.

ஐந்தில் ஒருவர் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறினர்.

மேலும் பத்தில் ஒருவருக்கும் குறைவானவர்களே இந்த முடிவை ஒரு சாத்தியமான நேர்மறையாக குறிப்பிட்டனர்.

பதின்மூன்று சதவீதம் பேர் உறுதியான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 12ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட மத்திய அரசாங்கம்

Lankathas Pathmanathan

பயங்கரவாத குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment