தேசியம்
செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் சியான் சின்னராஜா வேட்பு மனு தாக்கல்!

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வீடு விற்பனை முகவர் சியான் சின்னராஜா தாக்கல் செய்துள்ளார்.

Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தொகுதி வெற்றிடமானது.

இங்கு Toronto நகர சபை உறுப்பினர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதல் நாளான திங்கட்கிழமை (23) மொத்தம் ஏழு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (24) சியான் சின்னராஜா தனது வேட்புமனுவை குடும்பத்தினருடன் தாக்கல் செய்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் இரண்டு தமிழர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களான அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் திங்களன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு August 15-ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதியும், முன்கூட்டிய வாக்களிப்பு September 20 , 21-ஆம் திகதிகளிலும் நடைபெறும் .

இந்த இடைத்தேர்தல் $550,000 செலவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

Scarborough-Rouge Park பகுதியில் Toronto நகர முதல்வரின் சமூக பாதுகாப்பு மக்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது குறித்த தகவல்களை அனுப்பும் மத்திய அரசு!

Lankathas Pathmanathan

Leave a Comment