தேசியம்
செய்திகள்

கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா ஜனாதிபதி மதிக்கிறார்: Mark Carney

கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா ஜனாதிபதி மதிப்பதாக கனடிய பிரதமர் தெரிவித்தார்.

கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-உடன் வெள்ளிக்கிழமை (28) தொலைபேசியில் உரையாடினார்.

இந்த “நட்புரீதியான” அழைப்பு விரிவான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பம் என் Mark Carney விவரித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியுடனான தனது தொலைபேசி உரையாடல் “சுமூகமாக” இருந்ததாகவும், இரு நாடுகளும் இந்த உரையாடல் மூலம் “முன்னேற்றம்” அடைந்ததாகவும் Mark Carney கூறினார்.

கனடாவின் இறையாண்மையை ஜனாதிபதி தனது தனிப்பட்ட, பகிரங்க கருத்துக்களில் மதித்திருப்பதை கனடிய பிரதமர் சுட்டிக் காட்டினார்.

கனடிய அலுமினியம், வாகனம் மீதான வரிகள் இரத்து செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தன்னுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிடவில்லை எனவும் Liberal தலைவர் தெரிவித்தார்.

அமெரிக்கா வரி கட்டணங்களை April 2  விதித்தால், கனடா எதிர் வரி கட்டணங்களை விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் Mark Carney கூறினார்.

கனடிய பிரதமர் Mark Carney-யுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump முன்னர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mark Carney கனடிய பிரதமராக பதவியேற்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் மேற்கொள்ளும் முதலாவது தொலைபேசி உரையாடலை இதுவாகும்.

இந்த உரையாடலின் போது இருவரும் பல விடயங்களில் உடன்பட்டதாக தெரிவித்த Donald Trump, கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக சந்திக்க இணக்கி உள்ளதாகவும் கூறினார்.

April 2 முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்படாத வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்க நடவடிக்கை எடுத்த முடிவை அமெரிக்க அதிபர் அறிவித்த சில தினங்களின் பின்னர் இந்த உரையாடல் நிகழ்ந்தது.

Related posts

இடியுடன் கூடிய பலத்த காற்றின் சேதங்களில் இருந்து மீள்வதற்கு ஆதரவு வழங்க தயார்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

குடிவரவு அமைச்சரின் அலுவலகம் சேதம்

Lankathas Pathmanathan

மோசமடையும் COVID நிலை – அவரசமாக கூடும் Ontario அமைச்சரவை

Lankathas Pathmanathan

Leave a Comment