தேசியம்
செய்திகள்

அகதி தஞ்சம் கோரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு?

மாணவர் அனுமதியில் கனடாவுக்குள் வரும் சர்வதேச மாணவர்களில் அதிகமானவர்கள் அகதி தஞ்சம் கோருவதாக தெரியவருகிறது.

இதனை ஒரு “ஆபத்தான போக்கு” என குடிவரவு அமைச்சர் Marc Miller விமர்சித்தார்.

மாணவர் அனுமதியில் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் சர்வதேச மாணவர்கள் பலர் கனடாவில் தங்குவதற்காக அகதி தஞ்சம் கோருகின்றனர் என அமைச்சர் கூறினார்.

இவர்கள் சர்வதேச மாணவர் திட்டத்தை “கனடாவுக்குள் நுழையும்” வழிமுறையாக பயன்படுத்துகின்றனர் என அவர் தெரிவித்தார்.

இந்த சவால் குறித்து தனது அமைச்சு ஆராந்து வருவதாக கூறிய Marc Miller, இந்தத் திட்டத்தில் மேலும் சீர்திருத்தங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச மாணவர் அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு 10 சதவீதம் குறைப்பதாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தது.

Related posts

Belleville யூத வழிபாட்டு தல துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் மரணம்!

Lankathas Pathmanathan

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் இளைஞர் கைது: RCMP

Lankathas Pathmanathan

மீண்டும் தேர்தலில் போட்டியிடும் கனடாவின் நீண்ட கால அரசியல்வாதி

Lankathas Pathmanathan

Leave a Comment