தேசியம்
செய்திகள்

போலியான இலங்கை கடவுச்சீட்டின் மூலம் வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்ட தமிழர் கைது!

போலியான இலங்கை கடவுச்சீட்டின் மூலம் வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்ட ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Pickering நகரில் செவ்வாய்க்கிழமை (13) இவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் Whitchurch-Stouffville நகரைச் சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என Durham பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர் செவ்வாய்கிழமை Pickering நகரில் உள்ள Scotia வங்கியில் வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்டுள்ளார்.

இவர் உபயோகிக்க முனைந்த இலங்கை கடவுச்சீட்டு மோசடியானது என கண்டறிந்த வங்கி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.

கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சொந்த பிணையில் விடுதலையான அவருக்கு எதிரான குற்றச் சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

Durham தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

போலியான COVID சோதனை முடிவுகளை வழங்கிய விமானப் பயணிகளுக்கு  17 ஆயிரம் டொலர் அபராதம்

Lankathas Pathmanathan

Leave a Comment