September 10, 2026
தேசியம்
செய்திகள்

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Ontario மாகாண கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகினார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார்.

தனியார் துறையில் ஒரு பதவியை ஏற்றுக் கொள்வதற்காக அரசியலை விட்டு வெளியேறுவதாக Todd Smith வெள்ளிக்கிழமை (16) வெளியான ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Bay of Quinte மாகாணசபை உறுப்பினர் Todd Smith, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது அமைச்சு பதவியில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறார்.

தனது முடிவை முதல்வர் Doug Ford இடம் அறிவித்துள்ளதாக Todd Smith தெரிவித்தார்

Ontario மாகாண எரிசக்தி அமைச்சராக Todd Smith மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

June மாத அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இவர் 2011ஆம் ஆண்டு முதல் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

Ontario மாகாணத்தில் January மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக அறிவிக்கும்  சட்டமூலத்தை Todd Smith அறிமுகப்படுத்தினார்.

Todd Smith இந்த சட்டமூலத்தை ஐந்து முறை மாகாண சபையில் முன்வைத்த நிலையில் அதற்கான அங்கீகாரம் 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Torontoவில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு?

Lankathas Pathmanathan

கனேடிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இணைய மூல உரையாடலில் பங்கேற்ற உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் புதிய தூதர் தேர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment