தேசியம்
செய்திகள்

Stanley கோப்பை வெற்றியை தவற விட்ட Oilers

Stanley கோப்பையை வெற்றி பெறும் சந்தர்ப்பத்தை Edmonton Oilers அணி தவற விட்டுள்ளது.

NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Oilers அணி தெரிவானது.

இந்த தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers அணியை Oilers அணி எதிர்கொண்டது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி Stanley கோப்பையை வெற்றி பெறும்.

இதில் முதல் மூன்று ஆட்டங்களில் Panthers அணியும், தொடர்ந்து அடுத்த மூன்று ஆட்டங்களில் Oilers அணி வெற்றி பெற்றன.

இந்த நிலையில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஏழாவது ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி Stanley கோப்பையை வெற்றி பெறும் நிலை தோன்றியது.

இந்த ஏழாவது ஆட்டத்தில் Panthers அணி வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் 30 ஆண்டுகளில் Stanley கோப்பையை வென்ற முதலாவது கனடிய அணி என்ற பெருமையை பெறும் சந்தர்ப்பத்தை Oilers அணி தவற விட்டுள்ளது.

இம்முறை NHL Playoff தொடர் நான்கு கனடிய அணிகளுடன் ஆரம்பமானது.

இவற்றில் Toronto Maple Leafs, Vancouver Canucks, Winnipeg Jets ஆகிய கனடிய அணிகள் இம்முறை இந்த தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளன.

இறுதியாக Oilers அணியும் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது

இந்த நிலையில் இறுதியாக 1993 இல் Montreal Canadiens அணி Stanley கோப்பையை வென்ற கனடிய அணியாக தொடருந்து உள்ளது.

Related posts

Ontarioவில் கடந்த வருடம் 100,000 டொலர்களுக்கு அதிகமான ஊதியம் பெற்றவர்களின் பட்டியல் வெளியானது!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்ட Conservative கட்சி உறுப்பினர்கள் பெயர் பட்டியல் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan

இந்த வாரம் 250 ஆப்கானிஸ்தான் அகதிகள் கனடா வருகை

Lankathas Pathmanathan

Leave a Comment