தேசியம்
செய்திகள்

Air Canada விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயன்ற பயணி

Toronto நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றதாக தெரியவருகிறது

இந்த பயணியை விசாரணைக்கு உட்படுத்தியதாக Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர் கைது செய்யப்படவில்லை எனவும்  அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை London இங்கிலாந்தில் இருந்து Toronto பயணித்த Air Canada Boeing 787-9 விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பயணி “நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்றார்” என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

விமானம் உயரத்தில் பறக்கும் போது அவ்வாறு செய்ய முடியாது என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் விமானம் Pearson விமான நிலையத்தில் பாதுகாப்பாக  தரையிறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

Latvia-வில் NATO பணியை மூன்று ஆண்டுகள் நீட்டிக்க கனடா உறுதி

Lankathas Pathmanathan

Ontario மாகாண Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative வெற்றி உறுதி!

Lankathas Pathmanathan

திருடப்பட்ட 160 வாகனங்கள் மீட்கப்பட்டன

Lankathas Pathmanathan

Leave a Comment