September 30, 2026
தேசியம்
செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் தமிழர் கைது

Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டார்.

இவர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (21)  Brampton நகரில் Bovaird Drive & Mountainash Road பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

13 வயது சிறுமி ஒரு கடை தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை சந்தேக நபர்  அணுகியுள்ளார்.

அவர் தன்னை ஒரு காவல்துறை  அதிகாரி என கூறி, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அனுஷன் ஜெயக்குமார்,  நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார்.

இவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ள Peel பிராந்திய காவல்துறையினர் அவரால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Air கனடா தலைமை நிர்வாக அதிகாரி விரைவில் ஓய்வு?

Lankathas Pathmanathan

நேற்று 4 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா !

Gaya Raja

அமெரிக்க வரி விலக்கைப் பெறுவதற்காக கனடா ‘ஒரு சிறிய ஒப்பந்தத்தை நாடாது’: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment