தேசியம்
செய்திகள்

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கைது!

Manitoba முதற்குடி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பாதிரியார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச் சாட்டை எதிர்கொள்ளும் பாதிரியாரை Manitoba RCMP கைது செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (27) Little Grand Rapids முதற்குடியிட தேவாலயத்தில் இந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக RCMP தெரிவிக்கின்றது.

கைதானவர் ரோமன் கத்தோலிக்க பாதிரியார் 48 வயதான அருள் சவாரி என தெரியவருகிறது.

இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்ததாக தெரியவருகிறது.

இவரினால் வேறும் பல குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக RCMP தெரிவித்தது.

இவருக்கு எதிரான குற்றங்கள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனடாவுடன் விரைவில் புதிய வர்த்தக ஒப்பந்தம்?: Donald Trump கணிப்பு!

Lankathas Pathmanathan

உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

FIFA பெண்கள் உலகக் கோப்பை தொடரில் கனடிய அணியின் முதலாவது ஆட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment