தேசியம்
செய்திகள்

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் Justin Trudeauவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomasனின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி ஒன்று கடந்த வார விடுமுறையில் முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு Ottawa காவல்துறையினரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த அத்துமீறல் முயற்சி குறித்து விசாரணை ஒன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

அண்மைய மாதங்களில் பிரதமரின் முக்கிய உதவியாளர் ஒருவரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய   முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது முயற்சி இதுவாகும்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த மேலதிக விபரங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

Related posts

தலைமைத்துவ மதிப்பாய்வில் வெற்றி பெறுவேன்: Pierre Poilievre நம்பிக்கை 

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் Ontarioவில் நீக்கப்படும் COVID கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Pickering-Brooklin தொகுதியில் Conservative கட்சி சார்பில் தமிழர் போட்டி!

Lankathas Pathmanathan

Leave a Comment