September 14, 2026
தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தில் வாகனம் மோதியதில் இருவர் பலி – ஒன்பது பேர் காயம்

Quebec மாகாணத்தில் பல பாதசாரிகள் வாகனம் ஒன்றின் மூலம் தாக்கப்பட்டனர்.

Montreal வடகிழக்கில் Lower St. Lawrence பகுதியில் திங்கட்கிழமை (13) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதில் குறைந்தது இருவர் பலியானதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

பலியான இருவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரியவருகிறது.

காயமடைந்த சிலருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என Quebec மாகாண காவல்துறை கூறுகிறது.

இதனுடன் தொடர்புடைய 38 வயதான வாகன சாரதியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட செயலா என்பதை காவல்துறையினர் உறுதி செய்யவில்லை.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau, Quebec முதல்வர் ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts

மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் $1 மில்லியன் வெற்றி!

Lankathas Pathmanathan

COVID காலத்து தேர்தலுக்கு தயார்: கனேடிய தேர்தல் திணைக்களம்

Gaya Raja

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja

Leave a Comment