தேசியம்
செய்திகள்

சேவைகள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கின்றது: Rogers நிறுவனம்

ஒரு நாள் முழுவதும் தொடர்ந்த நாடு தழுவிய சேவை செயலிழப்பைத் தொடர்ந்து அதன் சேவைகள் மீண்டும் இயங்க ஆரம்பிப்பதாக Rogers நிறுவனம் வெள்ளிக்கிழமை (08) மாலை கூறியது.

எங்கள் சேவைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக Rogers தலைமை நிர்வாக அதிகாரி Tony Staffieri வெள்ளிக்கிழமை இரவு ஒரு அறிக்கையில் கூறினார்.

அனைவரும் விரைவில் மீண்டும் சேவைகளை பெற எங்கள் தொழில்நுட்ப குழுக்கள் கடுமையாக உழைத்து வருவதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்பு அறிவித்தபடி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவை இழப்புக்கான கட்டண மீள் வழங்கலை முன்னெடுப்போம் எனவும் அந்த செயல்முறை குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம் எனவும் Rogers நிறுவனம் தெரிவித்தது.

Rogers செயலிழப்பு பல கைத்தொலைபேசி, இணைய சேவைகள், வங்கிகள், debitகொள்முதல், கடவுட்சீட்டு அலுவலகங்கள், கனடாவின் ArriveCAN செயலி ஆகியவற்றை பாதித்துள்ளது.

இந்த சேவை தடைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இணையத் தாக்குதலால் சேவைகள் செயலிழக்கவில்லை என்பதை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicinoவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

வெள்ளிக்கிழமை Toronto பங்குச் சந்தையில் Rogers நிறுவனத்தின் பங்குகள் 73 சதத்தினால் குறைந்து $61.54 ஆக இருந்தது.

Related posts

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடாவுக்குள் வர தடை !

Gaya Raja

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

Gaya Raja

கனடா சில கடினமான நாட்களை எதிர்கொள்கிறது: துணை பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment