தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கனடா வழங்கியது

உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் மதிப்புள்ள பீரங்கித் துப்பாக்கிகளுக்கான மாற்று பீப்பாய்களை கனடா அனுப்புகிறது.
பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (15) இதனை அறிவித்தார்.
பெல்ஜியத்தில் நடந்த உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஆனந்த், இந்த உதவியை  அறிவித்தார்.
உக்ரைனின் மிக முக்கியமான பாதுகாப்புத் தேவைகளை நட்பு நாடுகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் நிவர்த்தி செய்கிறோம் என அமைச்சர் ஒரு அறிக்கையில் கூறினார்.
உக்ரேனுக்கு அதன் இறையாண்மையை பாதுகாக்க தேவையான இராணுவ உதவியை வழங்க தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

Related posts

நாடளாவிய ரீதியில் 324 காட்டுத்தீ

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தை அவசரகால நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும்: பசுமை கட்சியின் தலைவி வலியுறுத்தல்!

Gaya Raja

உயர்மட்ட Liberal  அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment