தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் NDP தலைவி Andrea Horwath

Ontario மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது நாளான புதன்கிழமை (04) NDP தலைவி Andrea Horwath தமிழரான நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார்.

புதன்கிழமை Ontario மாகாண சபையில் தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் NDP தலைவி Andrea Horwath, PC கட்சியின் மூன்று தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இவற்றில் தமிழரான நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியும் ஒன்றாகும்.

நீதன் சானின் பிரச்சார அலுவலகத்தில் (2923 Lawrence Ave E) புதன்கிழமை (04) மதியம் 12:45க்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

NDP கடந்த தேர்தலில் 100 தொகுதிகளில் முதல் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

NDP கடந்த தேர்தலில் 40 இடங்களை வென்றது.

Related posts

Salmonella காரணமாக 5 மாகாணங்களில் 61 பேர் நோய் வாய்ப்பட்டனர்

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்தில் பத்தாவது ஆண்டாக தமிழ் மரபுத் திங்கள்

Lankathas Pathmanathan

Ontarioவில் 4,800க்கும் அதிகமான தொற்றுகள் வெள்ளிக்கிழமை பதிவு!

Gaya Raja

Leave a Comment