தேசியம்
செய்திகள்

 Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

 Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமையை விட செவ்வாய்க்கிழமை (29) 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

Ontarioவில் செவ்வாயன்று 790 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 165 பேர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்களின் எண்ணிக்கை 655 ஆகவும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 158 ஆகவும் இருந்தது.

செவ்வாயன்று மேலும் 7 COVID தொடர்புடைய மரணங்கள் அறிவிக்கப்பட்டன.

Ontario தடுப்பூசிக்கான ஆதாரத் தேவைகளை March 1 ஆம் திகதி விலத்தியது.

March 1 ஆம் திகதி பெரும்பாலான உட்புறங்களில் முகமூடி தேவைகளை நீக்கியது.

மீதமுள்ள அனைத்து பொது சுகாதார கட்டுப்பாடுகளும் April மாத இறுதியில் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கனடாவில் COVID முடிவடையவில்லை: சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos

St. Catharines நகர தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

Newfoundland and Labrador அமைச்சர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment