November 13, 2025
தேசியம்
செய்திகள்

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon செவ்வாய்க்கிழமை (15) இங்கிலாந்தின் அரச குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்தார்.

இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத், ஆளுநர் நாயகம் Simo, அவரது கணவர் Whit Fraser ஆகியோருடன் Windsor கோட்டையில் செவ்வாய் மாலை தேநீர் அருந்தினார்.

மகாராணியை சந்தித்தது குறித்து ஒரு அறிக்கையில் ஆளுநர் நாயகம் Simon மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு Platinum விழாவை கொண்டாடும் மகாராணிக்கு கனடியர்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக Simon ராணியை சந்தித்ததாக ஆளுநர் நாயகம் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மகாராணியுடனான ஆளுநர் நாயகத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ சந்திப்பும் முதலாவது நேரடி சந்திப்புமாகும்.

கடந்த வாரம் இங்கிலாந்து சென்றிருந்த பிரதமர் Justin Trudeau அங்கு மகாராணியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

வேலையற்றோர் விகிதம் ஐந்து சதவீதத்தில் நிலையாக உள்ளது!

Lankathas Pathmanathan

கனேடிய தேர்தலில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் ஆதரவு!

Gaya Raja

Leave a Comment