தேசியம்
செய்திகள்

தொடர்ந்தும் ஐந்தாவது வருடமாக பொங்கலுக்காக ஒளியூட்டப்படவுள்ள Toronto அடையாள எழுத்துக்கள்

Toronto நகர சபைக்கு முன்பாக உள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் சனிக்கிழமை (15) ஒளியூட்டப்படவுள்ளன.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த சிறப்பு நகர்வை Toronto நகரசபை முன்னெடுத்துள்ளது.

தொடர்ந்தும் ஐந்தாவது வருடமாக நகர சபைக்கு முன்பாக உள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஒளியூட்டப்படவுள்ளன.

முன்னால் நகரசபை உறுப்பினர் நீதன் சான் இந்த ஏற்பாட்டை 2018ஆம் ஆண்டு முதலில் செய்திருந்தார்.

இம்முறை தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்த பாரம்பரியம் தொடர்கின்றது.

Mississauga நகர மண்டபத்தில் உள்ள மணிக்கூண்டு சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வெள்ளிக்கிழமை (14) இரவு எரியூட்டப்படுகிறது.

தைப்பொங்கலைக் குறிக்கும் விதமாகவும், தமிழ் பாரம்பரிய மாதத்தின் போது நமது சமூகத்திலுள்ள அனைத்துத் தமிழர்களையும் கொண்டாடுவதற்காகவும் இந்த நகர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Ontarioவில் January மாதத்தை தமிழ் மரபுரிப்பை மாதமாக முதலில் அறிவித்த நகரம் Markham ஆகும்.

Markham நகரசபை 2002ஆம் ஆண்டு முதல் தடவையாக தமிழ் மரபுரிப்பை மாதத்தை பிரகடனப்படுத்தியது.

Toronto நகர முதல்வர் John Tory, Markham நகர முதல்வர் Frank Scarpitti, Mississauga நகர முதல்வர் Bonnie Crombie, Brampton நகர முதல்வர் Patrick Brown, Ottawa நகர முதல்வர் Jim Watson உள்ளிட்ட நகர முதல்வர்களும், நகரசபை உறுப்பினர்களும் தமது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்ததனர்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கமான வர்த்தக உறவுகள்

Lankathas Pathmanathan

விமானத்தின் கதவை திறந்த குற்றத்தில் கனடியர் தாய்லாந்தில் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment