தேசியம்
செய்திகள்

Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி

கனடாவில் Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் தற்போது உள்ளது என தெரிவித்த கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி, அது விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரித்தார்.

Ontarioவில் 21 சதவீதமான  புதிய தொற்றுகளுக்கு Omicron காரணமாக இருப்பதை போன்ற நிலை கனடாவின் ஏனைய பகுதிகளுக்கும் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும்  வைத்தியர் Theresa Tam தெரிவித்தார்.

கடந்த நாட்களில் கூட இந்த திரிவு குறித்து நிறைய கற்றுக் கொண்டோம் என தெரிவித்த அவர், இது மிகவும் பரவக்கூடியது அல்லது நிச்சயமாக பெரும் பரவல் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய நிலையில் Omicron திரிவு பரவினால் January நடுப்பகுதியில் கனடாவில் நாளாந்தம் 12 ஆயிரம் தொற்றுக்கள் வரை பதிவாகும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.

இந்த கணிப்புகள் குறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக இன்று காலை தெரிவித்த பிரதமர் Justin Trudeau, தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

Related posts

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

September 30 அநேக மாகாணங்களில் விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை!

Lankathas Pathmanathan

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment