தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ளும் தனது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் அரசாங்கம்!

நாடாளுமன்ற அமர்வுகளில் நேரடியாக கலந்து கொள்ளும் Liberal கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு பெருமளவு குறைத்து வருகிறது.

COVID தொற்றின் Omicron திரிபின் பரவல் காரணமாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

புதன்கிழமை (15) நடைபெறவுள்ள Liberal கட்சியின் அனைத்து பிராந்திய மற்றும் தேசிய உறுப்பினர்களின்  கூட்டங்களும் மெய்நிகர் ஊடக நடைபெறும் என அரசாங்க அவைத் தலைவர் Mark Holland கூறினார்.

சபையில் அதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் ஆளும் கட்சியின் முடிவு குறித்து தனது எதிர்க்கட்சி சகாக்களுக்கு தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஆனால் அதைப் பின்பற்றலாம் என்பதை ஏனைய  கட்சிகள் தீர்மானிக்கும் எனவும் Holland தெரிவித்தார்.

Related posts

NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு Brussels பயணமாகும் Trudeau

January 30 ஆம் திகதி Justin Trudeau அரசாங்கம் கவிழும்?

Lankathas Pathmanathan

நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் NDP தலைவி Andrea Horwath

Leave a Comment