November 13, 2025
தேசியம்
செய்திகள்

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் British Colombia மாகாண முதல்வர்

British Colombia மாகாண முதல்வர் John Horgan புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது

வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் நோயறிதலை Horgan  உறுதிப்படுத்தினார்,

தனது தொண்டையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டி புற்றுநோயானது எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களில் கதிர்வீச்சு சிகிச்சையை ஆரம்பிக்க உள்ளதாகவும் முதல்வர் Horgan கூறினார்.

வைத்தியர்கள் அறிவுரையின் பிரகாரம் தான் முழுமையாக குணமடைவேன் என எதிர்பார்ப்பதாக  அவர் கூறினார்.

December இறுதியில் தனது சிகிச்சை முடிவடையும் என Horgan எதிர்பார்க்கிறார்.

கதிர்வீச்சு சிகிச்சைக்கு உள்ளாகும்போது, மெய்நிகர் மூலம் கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

Related posts

நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்த கனடியர்கள்!

Gaya Raja

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்ட விதிகளை மீறிய Canadian Tire உரிமையாளருக்கு அபராதம்

Lankathas Pathmanathan

Quebecகின் இரவு நேர ஊரடங்கு விரைவில் நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment